Monday, December 21, 2009

கிறுக்கன்...


பார்த்தகனம் கவர்ந்தாள்...

காதலிக்கச் செய்தாள் !

முழுமையாய் என்னை மாற்றினால்...

கவிதைப்பிரியனாய் !

காதல் கிறுக்கனாய் !

கவிதை வடிவில்

காதலை சொன்னேன்...

தூக்கி எறிந்தால்

கவிதையையும் காதலையும்...

இன்றும் அலைகிறேன்!

அவ்விரண்டையும்

நானும் தூக்கிஎறிந்துவிட்டு...

குழந்தைகளுக்கு பிரியனாய் !

வெறும் கிறுக்கனாய்....

Sunday, November 29, 2009

இன்றைய விவசாயம்...



விளைச்சலை பெருக்க

வேதியல் உட்புகுந்தது...

பூச்சிகளை கொல்ல
 
பூச்சிக் கொல்லி...

களைகளைக் கொல்ல

களைக் கொல்லி...

அமோக விளைச்சல்!

அறுவடை செய்தனர்...

எண்ணற்ற நோய்களை!

அரிசியின் வேதியல் பெயர்

ஆட்கொல்லி...!

லஞ்சம்...


லஞ்சத்தை

ஒழிக்கும் குறிக்கோளுடன்

பாடுபட்டு படித்தான்...

இறுதியில்

மாவட்ட ஆட்சியரும் ஆனான்....

வழியின்றி

பல லட்சம்

லஞ்சமாய் கொடுத்து...

Sunday, November 15, 2009

பறிக்க வேண்டி...

பூக்களை பறிக்காதீர்

-தோட்ட வேண்டுகோள்...

பறிக்க ஆளில்லை

-அழிகிய மலர்களை !

ஆனதை விடுதியில்

பறை...

பறையின் சத்தம்...

ஒலிக்கிறது

இன்னும் சில இடங்களில் !

இசையால் அல்ல...

உரிமைக்குரலாய் !!!

ஊனம்...

உண்டானதல்ல !

உண்டாக்கப்பட்டது...

எங்களால் அல்ல !

எண்ணற்ற ஏக்கங்களால்...

உங்களாலும் அல்ல !

உயிரற்ற ஊக்கங்களால்...

உண்டாக்கப்பட்ட ஊனத்துடன்,

கோவில் பிட்சையர்கள்...

சாதியை வென்ற பணம்...

தாழ்ந்தவன்,

உயர மறுக்கிறான் !

உயர்ந்தவன்,

தாழ வருகிறான் !

அரசின் உதவித்தொகையால்...

Saturday, November 14, 2009

அரசியல்...


கட்சிகள் வேறு...

கொடிகள் வேறு...

தொண்டர்கள் வேறு...

தலைவர்கள் வேறு...

ஆனால்,

கொள்கை மட்டும் ஒன்றே !

ஆட்சியை பிடிப்பது...

மக்களை கவிழ்ப்பது ...


நட்பின் பிரிவு...

இருட்டில்

நிழலும் பிரிந்திடுமாம்....

உண்மைதான்,

என்னக்கு என்ன பயம்...

பிரிவை பற்றி !

இருளாய் நீ சூழ்ந்திருக்க...

ஒற்றுமை!

துப்பாகி சூடு,

பீரங்கி முழக்கம் ,

ஏவுகனை தாக்குதல் ,

அணுகுண்டு வெடித்தல் ,

இன்னும் பல இருந்தும்…

இன்னும் நீடிக்கிறது

ஒற்றுமை !

உலக வரைபடத்தில்...

ஆறுதல் !

‘அதிக சுமை’

அழைக்களியும் மாடு…

ஆனாலும் ஆனந்தம் !

பள்ளி சிறுவனை பார்த்து…

ஜாதியில்…

தாழ்ந்தவன் ,

உயர மாறுகிறான் !

உயர்ந்தவன் ,

தாழ வருகிறான் !

அரசின் உதவித்தொகையால்.…

அரசியல்.!.!.!

KD கள்…

புரள்கிறார் ,

கோடியில்!

அரசியலில்...

அரசியல்.!.!

கோடிகள் கொள்ளை ,

கொள்கைகள் இல்லை ,

அரசியல்வாதிகள் !

அனுமதி!?

அனுமதியற்ற சாலையிலும் ,

அழகாய் செல்கிறது…

வாகனம் !

கையூடின் அனுமதியோடு…

வேற்றுமையில் ஒற்றுமை....

"ஜாதிகள் இல்லையடி பாப்பா..."

"வேற்றுமையிலும்

ஒற்றுமை வேண்டுமடி..."

-பாடம் நடத்தினார்

ஆசிரியர்....

ஒரு பிரிவு மாணவர்களை

ஒதுக்கிவிட்டு....

நன்றிக்கடன் !

இதயத்தில் இரு நான்கு துளைகள்...

இருந்தும் வாழ்கிறேன் !

உன் சுவாசம் பெற்று...

இதோ !

இசையை,

என் நன்றிக்கடன்...

-புல்லாங்குழல்

பாதுகாப்பு...

தீவிரவாதிகள் ஊடுருவல்...

பாதுகாப்பு

இருமடங்கு பலப்படுத்தப்பட்டது...

அவர்கள்

குண்டு வைத்த இடத்தில்!

வெடித்த பின்னர்...

கிடைத்த வேலை...

மூடர்கள்!

சொல்கிறார்கள்...

எனக்கு வேலை இல்லையாம்!

அவர்களுக்கு

என்ன தெரியும்...

எனது வேலை

"வேலை தேடுவது" என்று...

உயிருக்கு வி(உ)லை !



விலைமதிப்பற்ற


உயிர்க்கு கூட

மதிப்பு ஏற்படுத்தியது....

தமிழன் அரசு....

௫50/- என்று

அரசு பொது மருத்துவமனையில்....

வறுமை...



தினம்
! தினம்!

விரதமிருக்கிறான்...

ஏழை!

ஒரு வேளை

உணவைப் பெற...